மற்றவர்கள் சொல்வதையே சொல்லியிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவாலும்

தேர்தல் என்றால் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதும், தங்கள் கட்சிகளைப் பற்றி புகழ்வதும் இயற்கைதான். இதையே தான் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் செய்வார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: தேர்தல் என்றால் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதும், தங்கள் கட்சிகளைப் பற்றி புகழ்வதும் இயற்கைதான். இதையே தான் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் செய்வார்கள்.

அதிலும் சில அரசியல்வாதிகள் ஒரே விஷயத்தையே சொல்லும் போது அது சில சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று தில்லியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், வாக்களிக்க எந்தக் கட்சி வேட்பாளரும் பணமோ பொருளோ கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கே வாக்களியுங்கள் எனறு கூறியுள்ளார்.

பணத்தையும் பரிசு பொருளையும் ஏன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன் என்றால், எல்லாமே உங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டதுதான் என்று கூறினார்.

கடந்த மாதமும் அரவிந்த் கேஜ்ரிவால் இதேப் போன்று பேசியதற்காக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com