சுடச்சுட

  

  எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கட்டாய மரண தண்டனை பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

  By DIN  |   Published on : 11th May 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினருக்கு (எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள கட்டாய மரண தண்டனை பிரிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  போலியான ஆதாரங்களின் அடிப்படையில்  ஏதேனும் ஒரு வழக்கில் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்படும் சூழலில், அவருக்கு எதிராக போலி ஆதாரங்கள் அல்லது பொய் சாட்சி அளித்த நபருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்க எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3 (2)ஆவது பிரிவு வழிவகை செய்கிறது.  இப்பிரிவை ரத்து செய்யக் கோரி, ரிஷி மல்ஹோத்ரா என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்டாய மரண தண்டனை என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் அவர் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai