சுடச்சுட

  

  கர்நாடகத்தில் வெகு விரைவில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: எடியூரப்பா

  By DIN  |   Published on : 11th May 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ediyurappa_(2)


  கர்நாடகத்தில் வெகுவிரைவில்   பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
  இதுகுறித்து, ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:  கர்நாடகத்தில் வெகு விரைவில் பாஜக ஆட்சி அமைவதற்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன.  மாநிலத்தை ஆட்சி செய்துவரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைச் சேர்ந்த 20 எம்எல்ஏ -க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  இந்த எம்எல்ஏ-க்கள் எந்த நேரத்திலும் எந்த முடிவையும் எடுக்க முடியும்.  அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஏற்கெனவே 104 இடங்கள் உள்ளன.  தற்போது இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் குந்தகோல், சின்சோளி தொகுதிகளில் பாஜக வெல்வது நூறுசதம்  உறுதி.  இடைத் தேர்தல் முடிவு வெளியானதும் பாஜகவின் பலம் 106 ஆக உயரவிருக்கிறது.  சட்டப்பேரவையில் உள்ள சுயேச்சை எம்எல்ஏ -க்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.  இது போன்ற சாதகமான  அம்சங்கள் பாஜக ஆட்சி அமைக்க உதவியாக இருக்கும். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் குழப்பம் நீடிக்கிறது.  இரு கட்சிகளுக்கும் இடையே  கருத்தொற்றுமை,  இணக்கம் எதுவுமில்லை.  அக் கட்சிகளின் எம்எல்ஏ-க்களை பாஜகவுக்கு இழுக்கும் எண்ணம்  இல்லை.  ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே காணப்படும் அரசியல் குழப்பத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம்.  பாஜகவுக்கு சாதகமான சந்தர்ப்பம் வரும்போது ஆட்சி அமைப்பது குறித்து  முடிவு செய்வோம்.மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.  மாநிலமெங்கும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.  ஆனால் முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவும்,  முதல்வர் குமாரசாமியும் ஓய்வெடுத்துவருகின்றனர்.   மக்களவை பொதுத் தேர்தல்,  சட்டப்பேரவை இடைத்தேர்தல்முடிவுகள் கர்நாடக அரசியலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவிருக்கின்றன. எச்.டி.தேவெகெளடா உள்ளிட்ட பெரும் தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai