சுடச்சுட

  

  ஜார்ஜியா போர் விமானத்தை இடைமறித்தது இந்திய விமானப் படை

  By DIN  |   Published on : 11th May 2019 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  plane


  பாகிஸ்தானிலிருந்து தில்லி நோக்கி வந்த ஜார்ஜியா போர் விமானத்தை இந்திய விமானப் படை இடைமறித்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க செய்தது.
  வான்வழி போக்குவரத்து விதிகளை மீறி வந்ததை கண்டறிந்த இந்திய விமானப் படை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த விமானத்தை இடைமறித்தனர்.
  அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த காரணத்தால் விமானத்தில் இருந்த குழுவினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
  குஜராத்தின் வடக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு ஜார்ஜியா போர் விமானம் சென்றுகொண்டிருந்தது.
   இதை கண்டறிந்தது, 27,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தை இடைமறிக்க இரண்டு சுகோய் 30 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
  பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் பயங்கரவாதிகளின் இடத்தில் தாக்குதல் நடத்திய பிறகு, அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  விசாரணையில் சந்தேகிக்கும் வகையில் எதுவும் இல்லாததால், போர் விமானம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்று ஜெய்ப்பூர் காவல் துறை கூடுதல் ஆணையர் லஷ்மண் கௌர் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai