சுடச்சுட

  

  நான் கூறிய வார்த்தைகளை திரித்துக் கூறுகிறது பாஜக: சாம் பிட்ரோடா

  By DIN  |   Published on : 11th May 2019 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நான் கூறிய வார்த்தைகளை பாஜக திரித்துக் கூறுகிறது என்று சாம் பிட்ரோடா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து நான் தெரிவித்த கருத்தை பாஜக மாற்றிக் கூறுகிறது. சீக்கிய சகோதர, சகோதரிகளின் வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனினும், கடந்த காலத்துக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டுக்கு பாஜக என்ன செய்தது? என்பது மட்டுமே இப்போது விவாதப் பொருளாக இருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவருமே மக்களை இனம் பிரித்து பார்த்ததில்லை. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு  ராஜீவ் காந்தி உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மட்டுமே ராஜீவ் காந்தி முக்கியத்துவம் அளித்தார். உண்மை திரித்து கூறப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொய்கள் அம்பலமாகி, உண்மை நிச்சயம் அனைவருக்கும் தெரிய வரும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai