சுடச்சுட

  

  பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்: மாயாவதி ஆவேசம்

  By ANI  |   Published on : 11th May 2019 04:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mayawati


  லக்னோ: ராஜஸ்தானில் கணவர் கண்முன்னே தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

  ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண்முன்னே அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. சம்பவம் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, சமூக ஊடகங்களில் வீடியோ வைரலான பின்னரே கடந்த 2 ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  தற்போது குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்க பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். 

  அதில், ராஜஸ்தானில் கணவர் கண்முன்னே தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை மற்றும் ஆளும் காங்கிரஸ் அரசு மீதும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரம் தலித் பெண்களுக்கானது மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்குமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

  மக்களவை தேர்தலில் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணையம் மீது மாயாவதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

  BSP Chief Mayawati: The guilty in Alwar gang-rape case should be hanged till death. Supreme Court should take action against the Congress government, police and the administration in the state. This matter is not just related to Dalits but all women.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai