சுடச்சுட

  

  லடாக்கில் ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளில் தில்லு முல்லு?: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு

  By DIN  |   Published on : 11th May 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் மக்களவைத் தேர்தலுக்காக ராணுவ வீரர்கள் அளித்த தபால் வாக்குகளில் தில்லு முல்லு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளதால் அதுதொடர்பான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது, தொலைபேசியில் ராணுவ உயரதிகாரிகள் ராணுவ வீரர்களை தொடர்பு கொண்டு அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வாக்குப் பதிவில் ரகசியம் காக்கப்படாமல் போயுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி, ராணுவத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனடிப்படையில், மேஜர் ஜெனரலை ராணுவம் விசாரணைக்காக நியமித்துள்ளது.
  ஸ்ரீநகர் ராணுவ செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் ராணுவத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு புகார் எழுப்பப்பட்டுள்ளது. எனினும், தீவிர விசாரணை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai