சுடச்சுட

  

  வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்: மாயாவதி

  By DIN  |   Published on : 11th May 2019 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mayavathi


  மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியால் வெற்றி பெற முடியாது என்பது பாஜக தலைவர்களுக்கு நன்கு தெரியும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
  சுட்டுரையில் (டுவிட்டர்) வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
  பகுஜன் சமாஜ்-சமாஜவாதி-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணியை ஜாதியவாத கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருப்பது நகைப்புக்குரியது மட்டுல்ல, முதிர்ச்சியற்ற கருத்தும் கூட. மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியால் வெற்றி பெற முடியாது என்பது பாஜக தலைவர்கள் அனைவருக்குமே நன்கு தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில் என்ன பேசுவது என்று தெரியாமல், எங்கள் கூட்டணியை பிரதமர் விமர்சித்து வருகிறார். பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்ற மோடியின் கனவு நிறைவேறாது.
  பிரதமர் மோடி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. எனவே, ஜாதிக் கொடுமைகளின் வலியும், வேதனையும் அவருக்குத் தெரியாது. எனவே, அவர் இதுபோன்ற தவறான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று முனைந்து கூறி வருகிறார். அவர் உண்மையிலேயே அந்தப் பிரிவில் பிறந்து இருந்தால், அவரை பிரதமராக ஆர்எஸ்எஸ் அனுமதித்திருக்காது. கல்யாண் சிங் போன்ற பாஜக தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
  குஜராத்தில் இப்போது வரை தலித் மக்கள் கெளரவமான வாழ்க்கையை வாழ முடியவில்லை. தலித் மக்கள் திருமண ஊர்வலத்தில் குதிரையில் செல்லக்கூட அனுமதிப்பது இல்லை. இதுபோன்று குஜராத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நான் நேரில் பார்த்துள்ளேன். ஜாதிக் கூட்டணி என்று எங்களை விமர்சிப்பதைவிட்டுவிட்டு, தனது சொந்த மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் சமஉரிமையை ஏற்படுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai