சுடச்சுட

  

  அதிநவீன 'அபாச்சி' ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் அறிமுகம்

  By ANI  |   Published on : 11th May 2019 01:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Apache_Guardian_attack_helicopter_1

   

  அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. 

  அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனங்களுடன் இணைந்து ஏஹெச்-64இ (ஐ) அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை தயாரிப்பது தொடர்பாக இந்திய விமானப்படை கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் 22 ஹெலிகாப்டர்கள் தயாரிப்பது தொடர்பாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

  அதனடிப்படையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக முதல் போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து முதல்கட்ட ஹெலிகாப்டர்கள் ஜூலை மாதத்தில் இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன. 

  இந்த வகை ஹெலிகாப்டர்களில் ராணுவத்துடன் இணைந்து செயல்படும் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai