சுடச்சுட

  

  ராஜ்தானி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

  By ANI  |   Published on : 11th May 2019 04:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rajdhani-express-Fire-breaks


  தில்லி-புவனேஷ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி விரைவு ரயிலில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

  தில்லி-புவனேஷ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி விரைவு ரயில் இன்று ஒடிசாவில் உள்ள காந்தபடா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ரயில் தீப்பிடித்து எரிந்தது. 

  இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதை அடுத்து பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் இருந்து விரைந்து வெளியேறினார். 

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடிசா தீயணைப்பு வீரர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர் மீட்புப் பணியார்கள் கூட்டாக செயல்பட்டு தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

  இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai