சுடச்சுட

  

  மோடியிடம் இருந்துதான் அந்த 'நியாய'மான யோசனையே கிடைத்தது: ராகுல்

  By ANI  |   Published on : 11th May 2019 06:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul

   

  அனைவரும் அவரவர் எதிரிகளை உற்று நோக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

  நாம் அனைவரும் நம்முடைய எதிரிகளை உற்று நோக்க வேண்டும். நானும் அதுபோன்று செய்ததால் தான் எனக்கு ஒரு நல்ல யோசனை ஏற்பட்டது. அது வேறொன்றுமில்லை, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வந்தபோது தான் நியாய் திட்டம் குறித்து எனக்கும் யோசனை தோன்றியது.

  கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தின்போது அனைவரது வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. அதிலிருந்து கிடைத்த யோசனையின் மூலம் தான் நியாய் திட்டத்தை உருவாக்கினோம். நாடு முழுவதும் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு வருடமும் தலா ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும் என்று அறிவித்தோம்.

  நரேந்திர மோடியும் அவரது கட்சியினரும் ஒளிரும் இந்தியா குறித்து எங்கும் பேசுவதில்லை. ஏனென்றால் இந்தியா ஒளிரவில்லை என்பது தான் உண்மை. பாஜக அரசால் அது ஒளிரப்போவதும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மக்களின் நம்பிக்கையை பெறுமாறு மோடிக்கு தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்காக ப.சிதம்பரம் மூலம் விளக்கமும் அளித்தோம். ஆனால், அதை அவர் ஒருபோதும் செய்யவில்லை.

  ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு என மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. யார் பேச்சையும் கேட்காமல் சுய அதிகாரத்தில் செயல்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதாவது சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குரல்களை மோடி கேட்டிருக்கலாம். ஏனென்றால் யாருக்கும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மீது நம்பிக்கையில்லை. அதை நிறைவேற்றியதில் விருப்பமும் இல்லை என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai