உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது நீண்டகால நலன் சார்ந்தது: ஜோதிராதித்ய சிந்தியா

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது நீண்டகால நலன்கள் சார்ந்தது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச்
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது நீண்டகால நலன் சார்ந்தது: ஜோதிராதித்ய சிந்தியா


உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது நீண்டகால நலன்கள் சார்ந்தது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சிகள் காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்க அதிகவாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பதும், தனித்துப் போட்டியிட முடிவு செய்தது சரியானதுதான் என்பது தெரியும். மாநிலம் முழுவதுமே சிறப்பான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும். நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டுதான் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மகா கூட்டணியால் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் என்று தனியாக ஒரு தளம் உள்ளது. கட்சி அமைப்புரீதியாக எந்த அளவுக்கு பலமாக உள்ளது, வேட்பாளர் எந்த அளவுக்கு மக்களுக்கு அறிமுகமானவர் என்பது போன்ற காரணிகளும் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
அரசியல் என்பது எப்போதும் வாய்ப்புகள் மற்றும் மாற்றங்கள் சார்ந்தது. 
தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதியே பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும், கூட்டணிகள் ஏற்படும். ஆனால், எந்தவகையான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போது கூற முடியாது. ஏனெனில், தேர்தல் முடிவுகளுக்கு ஏற்பதான் மாற்றங்கள் ஏற்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com