பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மத்தியில் ஆட்சியமைப்பது உறுதி: சந்திரபாபு நாயுடு

மத்தியில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சியமைக்கப் போவது உறுதி; பிரதமர் யாரென்பதை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆலோசித்து முடிவு செய்யும் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்
பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மத்தியில் ஆட்சியமைப்பது உறுதி: சந்திரபாபு நாயுடு


மத்தியில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சியமைக்கப் போவது உறுதி; பிரதமர் யாரென்பதை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆலோசித்து முடிவு செய்யும் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. செயல்படாத மோடி அரசை, ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் நடைபெற்று முடிந்த 5 கட்ட வாக்குப்பதிவு நிலவரங்களை வைத்து பார்த்தால், மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராவும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் இருப்பதை கணிக்க முடிகிறது. 
எனவே, மே 23-ஆம் தேதிக்கு பிறகு, மத்தியில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சியமைக்கப் போவது உறுதி. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுமே, மோடியை விட சிறந்த, வலிமையான தலைவர்கள்தான். அதேசமயம், அனைத்து கட்சிகளும் கூட்டாக ஆலோசித்து, பிரதமரை தேர்வு செய்யும். இதில், கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார் சந்திரபாபு நாயுடு.
பிரதமர் பதவிக்கான போட்டியில் மம்தா பானர்ஜியும் உள்ளாரா என்ற கேள்விக்கு, பிரதமர் பதவி தொடர்பாக இதுவரை நாங்கள் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகே ஆலோசிப்போம் என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்தார்.
அதேசமயம், பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்று தெரிவித்த சந்திரபாபு நாயுடு, ஒருங்கிணைப்பாளராகவே தனது பங்களிப்பு இருக்கும் என தெளிவுபடுத்தினார்.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க, வரும் 21-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதா என்ற கேள்விக்கு, பொருத்தமான நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துவோம் என்று அவர் பதிலளித்தார்.
இதனிடையே, மோடியை போன்ற தோல்விகரமான பிரதமரை, நாடு இதுவரை கண்டதில்லை என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com