மம்தா-சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மகா கூட்டணி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.
மம்தா-சந்திரபாபு நாயுடு சந்திப்பு


மகா கூட்டணி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியில் நடைபெற்றது. சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், மகா கூட்டணியின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சில தெலுங்கு தேச கட்சியின் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள 5 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது  என்றார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் மே மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அந்த நிர்வாகி, அந்தக் கூட்டம் நடைபெறும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அந்தக் கூட்டம் இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கிறோம். பெரும்பாலும், தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ஆம் தேதிக்குப் பிறகே அந்தக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com