சுடச்சுட

  

  பாஜகவில் இணைந்தார் பிரபல தொலைக்காட்சி நடிகர்: மகாபாரதத்தில் நடித்தவர்

  By DIN  |   Published on : 12th May 2019 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரபல தொலைக்காட்சி நடிகர் அருண் பக்ஷி, பாஜகவில் சனிக்கிழமை இணைந்தார்.
   தில்லியில் பாஜக மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ரமண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் அருண் பக்ஷி இணைந்தார்.
   இதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாஜக சித்தாந்தம், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கிறேன். மோடியை போன்று தற்போது நாட்டில் சிறந்த தலைவர்கள் யாரும் கிடையாது. அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பிறகு, அதுபோன்ற தலைவரை நாடு தற்போதுதான் பார்க்கிறது' என்றார்.
   சுமார் 200 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதுடன், பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
   மகாபாரதம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். மகாபாரத தொடரில் திரௌபதி, சிகண்டி ஆகியோரின் சகோதரன் திருஷ்டத்யும்னன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai