சுடச்சுட

  

  ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும்: ஹிமாசல் பாஜக தலைவர்

  By DIN  |   Published on : 12th May 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 1984ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்துக்கு காரணமான மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று ஹிமாசல பிரதேச மாநில பாஜக தலைவர் சத்பால் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
   தில்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் 5,000 உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். ஆனால் ராஜீவ் காந்தி, அதை நியாயப்படுத்தினார். நிலநடுக்கங்கள் நேரிட்டும், மிகப்பெரிய மரங்கள் சரிந்தும் இறந்ததாக குறிப்பிட்டார்.
   அவரது கருத்து, சீக்கியர்களை கொலை செய்ய காங்கிரஸாரை தூண்டியது. ராஜீவ் வலியுறுத்தலால், சீக்கியர்களை கொன்றவர்களுக்கு எதிராக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
   நேர்மையான காவல்துறை அதிகாரிகள், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடையோர் மீது வழக்குகள் பதிவு செய்தாலும், அவர்களை காங்கிரஸ் விடுதலை செய்தது.
   அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளால், இதுதொடர்பான வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய பங்கு வகித்த கமல்நாத்தை மத்திய பிரதேச முதல்வராக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இது கண்டனத்துக்குரியது.
   சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, நடந்தது நடந்துவிட்டது, அதனால் என்ன? என கேட்டுள்ளார். அவரது இந்த கருத்து, காயம் பட்ட புண்ணில் உப்பை தடவுவதற்கு சமமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai