திரிபுரா: 2 தீவிரவாத அமைப்புகள் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை ஆகிய 2 தீவிரவாத அமைப்புகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை ஆகிய 2 தீவிரவாத அமைப்புகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
 இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் சத்யேந்திர கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை ஆகிய 2 தீவிரவாத அமைப்புகள் மீதான தடையை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
 இந்த ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கூடியபோது, அதன்முன்பு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் நேரில் ஆஜராகவில்லை.
 இதனிடையே, 2 தீவிரவாத அமைப்புகள் மீதான தடையை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு திரிபுரா மாநில அரசு, பாதுகாப்பு அமைச்சகம், புலனாய்வு துறை, அமைச்சரவை செயலகம், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் ஆகியவையும் பரிந்துரை செய்திருந்தன.
 இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் அண்டை நாட்டில் புகலிடத்தை ஏற்படுத்தியதுடன், ஆயுதப் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.
 ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து வருகின்றனர்.இவை அனைத்தையும் பரிசீலித்து, 2 தீவிரவாத அமைப்புகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்
 பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com