பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைந்ததால் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறது பாஜக

பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைந்துவிட்டதால் மேற்கு வங்கத்தை பாஜக குறிவைக்கிறது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைந்ததால் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறது பாஜக

பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைந்துவிட்டதால் மேற்கு வங்கத்தை பாஜக குறிவைக்கிறது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
 24 பர்கானா மாவட்டம், ஹரோவா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
 எந்த மாநிலத்திலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாது. உத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
 இந்த முறை அந்த எண்ணிக்கை 13 அல்லது 17ஆகக் குறையும். ஆந்திரப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், தமிழகம், ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் ஓரிடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது.
 மத்தியப் பிரதேசத்திலும் அக்கட்சி தோல்வி அடையும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
 மத்தியில் புதிய அரசை அமைப்பதில் திரிணமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும். பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அனைத்தும் ஒன்றே. எனவே, திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.
 பாஜகவை எதிர்க்க துணிவுள்ள கட்சி திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே. ரிசர்வ் வங்கி, சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய மத்திய அரசின் முக்கிய பல அமைப்புகளை தனது கட்டுப்பாட்டில் பாஜக வைத்துள்ளது.
 பிரதமர், மத்திய அமைச்சர்கள் பயணிக்கும் வாகனங்களையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றார் மம்தா.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com