சுடச்சுட

    

    அல்வார் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை: ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 13th May 2019 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramvilas-paswan

    ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
     இதுதொடர்பாக ராம்விலாஸ் பாஸ்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அல்வார் சம்பவத்துக்கு ராஜஸ்தான் அரசே பொறுப்பு. தேர்தல் ஆதாயத்துக்காக அல்வார் சம்பவத்தை பல நாள்களாக ராஜஸ்தான் அரசு மூடி மறைத்து விட்டது. தேர்தல் நடைபெற்று முடியும் வரையில், அல்வார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யக் கூட போலீஸுக்கு மாநில அரசு அனுமதியளிக்கவில்லை.
     இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். அல்வார் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் பாஸ்வான் குற்றம்சாட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai