சுடச்சுட

  

  கர்நாடகத்தில் 2 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வென்றால் பாஜக ஆட்சி அமையும்

  By DIN  |   Published on : 13th May 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yedi6

   

  கர்நாடகத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வென்றால், பாஜக ஆட்சி அமைக்கும் என்று அதன் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

  இது குறித்து ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும். இரு தொகுதிகளில் பாஜக வென்றால், பாஜக ஆட்சி அமைவது உறுதி. கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது.

  குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக தொண்டர்கள் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்து வருகிறார்கள். இரு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

  பாஜக தலைவர்களை, தொண்டர்களை இழுக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் மேலிடத் தலைவர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யார் வந்தாலும் பாஜகவின் தொண்டர்கள், தலைவர்களை காங்கிரஸுக்கு இழுக்க முடியாது.

  பாஜக தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகிவரும் நிலையில், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறும் நிலையில், பாஜக தொண்டர்கள் காங்கிரஸுக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு பாஜகவினர் இரையாக மாட்டார்கள் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai