சுடச்சுட

  

  பெண்களுக்கு எதிரான கருத்துகளுக்காக நவ்ஜோத் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மகளிர் அணி

  By DIN  |   Published on : 13th May 2019 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹிமாசலப் பிரதேச மாநில பாஜக மகளிரணி தலைவி இந்து கோஸ்வாமி வலியுறுத்தியுள்ளார்.
   இந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சித்து பேசியபோது, "புகுந்த வீட்டில் எந்த வேலையையும் செய்யாத போதிலும் அதிக வேலையை செய்து களைப்படைந்தது போல புதிய மணப்பெண் காட்டி கொள்வார். அத்தகைய புதிய மணப்பெண் போன்றவர் பிரதமர் நரேந்திர மோடி' என விமர்சித்திருந்தார்.
   இதற்கு ஹிமாசலப் பிரதேச பாஜக மகளிர் அணி தலைவி இந்து கோஸ்வாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
   சித்துவின் பேச்சு, காங்கிரஸ் கட்சியின் பெண்கள் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இந்திய பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் சித்து, அவர்களை பெண்கள் விரோத மனப்பான்மையிலேயே காண்கிறார்.
   நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி எண்ணிக்கையில் பெண்கள்தான் உள்ளனர். அவர்களை மிகவும் பலவீனமானவர்கள் என்று தெரிவிக்கவே, சித்துவை அவ்வாறு காங்கிரஸ் பேச செய்துள்ளது.
   பெண்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக, சித்துவும், காங்கிரஸும் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களுக்கு எதிரான ரௌடிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடைக்கலம் கொடுத்து வருகிறார் என்று அந்த அறிக்கையில் இந்து கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai