சுடச்சுட

  

  பிரியங்கா வதேரா என்னிடம் தரக்குறைவாகப் பேசினார்: நீலம் மிஷ்ரா பகிரங்க குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 13th May 2019 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Neelam_Mishra_(2)

   

  மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்தது தொடர்பாக புகார் அளித்தபோது பிரியங்கா வதேரா என்னிடம் தரக்குறைவாகப் பேசினார் என்று காங்கிரஸ் தலைவர் நீலம் மிஷ்ரா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொதுச் செயலராக ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அம்மாநிலத்தின் முக்கிய முடிவுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே பாஜக-வில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான ரமாகாந்த் யாதவ் என்பவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

  இந்நிலையில், மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள நீலம் மிஷ்ரா என்பவர் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

  பல காலமாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருபவருக்குப் பதிலாக சமீபத்தில் பாஜக-வில் இருந்து காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ள ரமாகாந்த் யாதவுக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர் இந்த தொகுதியை கூட சேராதவர். இதனால் எங்கள் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

  எனவே இதுகுறித்து விளக்கமளிக்க பிரியங்கா வதேராவை சந்தித்தேன். ஆனால், அவர் மிகவும் கோபமடைந்து, தேசியக் கட்சியின் பொதுச் செயலர் மற்றும் ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசுகிறோம் போன்ற எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னிடம் மிகவும் தரக்குறைவாகப் பேசியதாக தெரிவித்தார்.

  மேலும், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், உள்ளூர் வேட்பாளராக உள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியின் ரங்கநாத் மிஷ்ராவுக்கு ஆதரவளிக்கப்போவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் தங்கள் பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இவரை ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai