இவர்களின் இன்றைய பிரசாரங்கள் எங்கு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் சனிக்கிழமை பங்கேற்கும் பிரசாரங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், 

பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் ரத்லம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பதின்டா ஆகிய 3 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஜாதவ்பூர் மற்றும் வடக்கு 24 பார்கன்ஸ் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், பஞ்சாப் மாநிலத்தின் ஃபதேகர் சாஹிப் மற்றும் ஹோசியர்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் உள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com