ராஜஸ்தானில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன: ஆளுநரிடம் பாஜக புகார் மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக தற்போது குற்றங்கள் அதிகரித்து விட்டதாக

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக தற்போது குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அந்த மாநில ஆளுநரிடம் பாஜக புகார் அளித்துள்ளது.
 ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தலித் பெண், கடத்தி செல்லப்பட்டு கணவர் முன்னிலையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸிடம் அப்பெண்ணின் கணவர் புகார் அளிக்க சென்றபோது, அதை அவர்கள் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
 பின்னர் கடந்த 2ஆம் தேதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தலித் பெண்ணின் கணவர் அளித்த பேட்டியில், தனது புகார் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
 இந்நிலையில், ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை, அந்த மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ராஜஸ்தானில் தற்போது தலித்துகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 மேலும் அந்த மனுவில், தலித்துகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றச் சம்பவங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு ஆளுநர் கல்யாண் சிங் அனுப்ப வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com