வன்முறையில் திரிணமூல் கட்சியினர்: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் சில வாக்குச்சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சில வாக்குச்சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஜங்கிள்மஹால் பகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் ஏன் விரும்புவதில்லை. தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடுவது அவமானகரமானதாகும். தாங்கள் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதை உணர்ந்துகொண்டதால் அக்கட்சி வன்முறையில் இறங்கிவிட்டது. வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறது.
 தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட திரிணமூல் காங்கிரஸ் அனுமதிக்க மறுக்கிறது. ஏதாவது இடையூறுகளை தொடர்ந்து அக்கட்சி ஏற்படுத்தி வருகிறது. மேற்கு வங்க அரசு அதிகாரிகள் சிலர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் உத்தரவுகளை செயல்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கவுள்ளோம் என்றார் நக்வி.
 திரிணமூல் பதிலடி: தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மத்திய அரசின் அமைப்புகளை பயன்படுத்தி மக்களை பாஜக மிரட்டி வருகிறது என்று திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், "பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே புகார் அளித்துவிட்டோம்' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com