சுடச்சுட

  

  பாஜக 50 தொகுதிகளுக்கு கீழ் வெற்றி பெற்றால் ஆச்சர்யமான விஷயம்: சுப்பிரமணியன் சுவாமி!

  By DIN  |   Published on : 14th May 2019 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sswamy


  17-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 தொகுதிகளுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்க பதிவில், 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 தொகுதிகளுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம் என பதிவிட்டுடிருந்தார். 

  சுப்பிரமணியன் சுவாமியின் மொட்டையான பதிவு பாஜகவினரை பதறச் செய்து விட்டது.

  கடைசியில் உத்தரப்பிரசேதம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 50 தொகுதிகளை தான் அப்படி குறிப்பிட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

  ஒரு வேளை நாடு முழுவதும் மொத்தமே 50 தொகுதிகளில் தான் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்ற உண்மையை சுப்பிரமணியன் சுவாமி சொல்ல வந்து இப்படி மழுப்புகிறாரோ என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai