சுடச்சுட

  

  பொது வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் மாயாவதி: ஜேட்லி கடும் தாக்கு

  By DIN  |   Published on : 14th May 2019 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jetly


  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பொது வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் என்று மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.
  பிரதமர் நரேந்திர மோடி அருகில் தங்களது கணவர் செல்வதை பாஜக பெண்கள் கூட விரும்ப மாட்டார்கள், பிரதமரை போல தங்களை கணவர் கைவிட்டு விடுவார் என்ற அச்சமே அதற்கு காரணம் என்று மாயாவதி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜேட்லி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  இதுதொடர்பாக சுட்டுரையில் ஜேட்லி வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  பிரதமராக வேண்டும் என்பதில் மாயாவதி உறுதியாக இருக்கிறார். ஆனால் அவரது ஆளுமை, நெறிகள், பேச்சு ஆகியவை மிகவும் தரம் தாழ்த்து விட்டது. பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் இன்று மாயாவதி பேசியதை வைத்து பார்க்கையில் பொது வாழ்க்கைக்கு அவர் தகுதியில்லாதவர் என்பது தெரிகிறது.
  மேற்கு வங்கத்தில் வன்முறை தலை விரித்தாடுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதை எதிர்க்கட்சித் தலைவர்கள் தவிர்க்கின்றனர். மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. எதிர்க்கட்சித் தொண்டர்கள் கொலை செய்யப்படுகின்றனர். வேட்பாளர்கள் தாக்கப்படுகின்றனர். வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களால் கூட்டம் நடத்த முடிவதில்லை.
  இந்த சம்பவம் குறித்து இடதுசாரி ஆர்வலர்கள் எதுவும் பேசாமல் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. இடதுசாரி தலைவர்கள் ஒளிந்து கொண்டார்களா? என்பதை அறிய விரும்புகிறேன்.
  இத்தகைய இந்தியாவைத்தான் நாட்டுக்கு எதிர்க்கட்சிகள் தர விரும்புகின்றன என்று அந்தப் பதிவுகளில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai