சுடச்சுட

  

  மம்தா பானர்ஜியை தவறாக சித்தரித்து புகைப்படம்: பாஜக நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் 

  By DIN  |   Published on : 14th May 2019 03:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme court

  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகி பிரியங்கா ஷர்மாவிற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

  சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற மெட்காலா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா வித்யாசமான ஆடை மற்றும் ஹேர்ஸ்டைலில் வலம் வந்தார். இது ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த பிரியங்கா சோப்ரா புகைப்படத்தில் பிரியங்காவின் முகத்தை பதிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை மாற்றி அமைத்து ஒரு புகைப்படத்தை, மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக ஹவுரா மாவட்ட பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

  இந்த புகைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரையடுத்து, ஹவுரா போலீசார், பிரியங்கா ஷர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி பா.ஜ.க. பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

  அப்போது இவ்விவகாரத்தில் மம்தா பானர்ஜியிடம் நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கேட்க வேண்டும்' என்கிற நிபந்தனையுடன் பிரியங்கா ஷர்மாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai