சுடச்சுட

  

  ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 14th May 2019 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  ஹிமாசல பிரதேச மாநிலம், சோலன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைக்கும் பிரதமர் மோடி, 


  வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை முந்தைய காங்கிரஸ் அரசு ஊழலுக்காக பயன்படுத்தி வந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டியுள்ளார்.
  ராணுவ தளவாடங்களுக்கு இந்தியா வெளிநாடுகளை நம்பி இருப்பதற்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
  இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி ஹிமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
  இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டத்திலேயே ராணுவ தளவாட உற்பத்தியில் 150 ஆண்டுகால அனுபவம் கொண்டதாக இருந்தது. அப்போது, சீனாவுக்கு இத்துறையில் அனுபவம் ஏதும் கிடையாது. ஆனால், இப்போது சீனா ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 
  ஆனால், இந்தியா இப்போதும் தனது ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை 70 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகளின் தவறான கொள்கைகள்தான் முக்கியக் காரணம். மேலும், வெளிநாட்டில் இருந்து ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்களை, காங்கிரஸ் அரசு ஊழலுக்காக பயன்படுத்தி வந்தது. ராணுவ வீரர்களுக்கான குண்டுதுளைக்காத உடைகளை வாங்க காங்கிரஸ் அரசு 6 ஆண்டுகள் வரை காலதாமதம் செய்ததால் பல ராணுவ வீரர்களை நாம் இழக்க நேரிட்டது.
  இப்போதைய பாஜக அரசு உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
  இப்போதைய பாஜக அரசு வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்கிறது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளின் பட்டியலிலும், மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இப்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 
  ஆனால், முன்பு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் எட்டப்பட்ட அதே பொருளாதார வளர்ச்சியைதான் அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசுகளால் தக்கவைத்துக் முடிந்தது. வளர்ச்சியை தீவிரமாக முன்னெடுக்கும் கொள்கை அவர்களிடம் இல்லை.
  உலகின்மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது என்றார் மோடி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai