அரசியல் தோல்வியால் மோடி மீது மாயாவதி கடும் விமர்சனம்

அரசியல் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதாலேயே, பிரதமர் மோடியை தனிப்பட முறையில் மிகக் கடுமையாக மாயாவதி விமர்சிக்கிறார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அரசியல் தோல்வியால் மோடி மீது மாயாவதி கடும் விமர்சனம்


அரசியல் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதாலேயே, பிரதமர் மோடியை தனிப்பட முறையில் மிகக் கடுமையாக மாயாவதி விமர்சிக்கிறார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 
முன்னதாக மாயாவதி, பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள், தங்களது கணவர்கள் மோடியை சந்திக்கும்போதெல்லாம், மோடியைப் போலவே அவர்களும் தங்களை கைவிட்டுவிடுவார்களோ என்று அஞ்சுவதாக அறிகிறேன் என்று கூறியிருந்தார். 
இதுதொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் மேலும் பேசியதாவது: பெண்கள் மீதோ, எந்தவொரு அமைப்புகளின் மீதோ மாயாவதி மரியாதை வைப்பது கிடையாது. ராஜஸ்தானில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, மாயாவதி தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்கிறார். 
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் சேர்ந்து அவரது பகுஜன் சமாஜ் கட்சி அமைத்த மகா கூட்டணி அரசியல் தோல்வியை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் கவலை அடைந்துள்ள மாயாவதி இவ்வாறு மோடியை விமர்சிக்கிறார். அவரது பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. மாயாவதி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். 
இந்த உலகத்திலேயே தான் ஒருவர் தான் தலித் என்று மாயாவதி நினைத்துக் கொண்டிருக்கிறாரா? பாஜகவில் இருக்கும் பெண் தலைவர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். கட்சியிலிருக்கும் சக தலைவர்களுடன் அரசியல் ரீதியாக நல்ல நட்பு கொண்டுள்ளனர். அரசியலில் மிகவும் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ள மாயாவதி, ராஜஸ்தானில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை பேச மறுக்கிறார் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
இச்செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜகவைச் சேர்ந்த தலித் தலைவரான பிஜாய் சோங்கர் சாஸ்திரி கூறுகையில், 2014 மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com