ஒடிஸா மக்களவைத் தேர்தல் முடிவுகள் தாமதமாகும்

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு, மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட இருப்பதால், அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 பானி புயல் தாக்குதலால் ஒடிஸா மாநிலம், புரி மாவட்டம், ரகுராஜ்பூர் கிராமத்தில், சேதமடைந்த தன்னுடைய வீட்டை கவலையுடன் பார்வையிடும் பெண்.
 பானி புயல் தாக்குதலால் ஒடிஸா மாநிலம், புரி மாவட்டம், ரகுராஜ்பூர் கிராமத்தில், சேதமடைந்த தன்னுடைய வீட்டை கவலையுடன் பார்வையிடும் பெண்.


ஒடிஸாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு, மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட இருப்பதால், அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஒடிஸா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் திங்கள்கிழமை கூறியதாவது: 
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே, இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வரும் 23-ஆம் தேதி ஒடிஸாவில் வாக்கு எண்ணிக்கைக்கு சற்று அதிக நேரம் தேவைப்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கையானது 14 மேஜைகளில் நடைபெறும். 
ஒடிஸாவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 7 மேஜைகளிலும், மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 7 மேஜைகளிலும் என பிரித்து எண்ணப்படவுள்ளன. 
அதேபோல், முதல் முறையாக வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை, பதிவான வாக்குகளுடன் ஒப்பீடு செய்ய இருப்பதால் அதற்கும் சற்று அதிகமாக நேரம் தேவைப்படும். 
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளில் இந்த ஒப்பீடு மேற்கொள்ளப்படும். 
அதற்கான வாக்குச்சாவடிகள் வெளிப்படையாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை, வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களாவது தேவைப்படும். 
ஒடிஸாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், முதல் முறையாக வாக்கு எண்ணும் மையங்களில் குளிர்சாதன (ஏ.சி.) வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் கூறினார். 
ஒடிஸாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11, 19, 23, 29 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com