ஜம்மு-காஷ்மீரில் முழுஅடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி பந்திபோரா மாவட்டத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த குழந்தையின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு காஷ்மீர் மக்களுக்கு ஹூரியத் மாநாட்டின் கீழ் இயங்கும் இடேஹதூல் முஸ்லிமீன்  பிரிவினைவாத அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. 
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் திங்கள்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.  ஸ்ரீநகரின் பெரும்பாலான பள்ளிகள்  மூடப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டிருந்தன. அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. எனினும், அரசு அலுவலகங்களும், வங்கிகளும் வழக்கம் போல இயங்கின என்றார்.
இதனிடையே, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த இடேஹதூல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் மெளலானா மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி பேசுகையில், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கும்  சமூக விரோதிகள் நம் நாட்டில் இருப்பது கொடுமையானது. இத்தகைய சமூக விரோதிகளை அழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது. ஒரு புறம், அந்த குழந்தை உயிருக்காக பேராடுகிறது. மறுபுறம், குற்றவாளியை தப்பிக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com