சுடச்சுட

  

  மத்தியில் அரசமைக்க காங்கிரஸின் ஆதரவை கூட்டாட்சி முன்னணி கோரும்: டிஆர்எஸ் கட்சி

  By DIN  |   Published on : 15th May 2019 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AbidRasool-Khan

  அபித் ரசூல் கான்


  மத்தியில் அரசமைக்க காங்கிரஸின் ஆதரவை கூட்டாட்சி முன்னணி  கோரும்; ஆனால் அரசுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை காங்கிரஸிடம் அளிக்காது என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) தெரிவித்துள்ளது.
  மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணியை அமைக்கும் முயற்சியில் டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மத்தியில் அரசமைக்க காங்கிரஸின் ஆதரவை கூட்டாட்சி முன்னணி கோரும் என்று டிஆர்எஸ் கட்சி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
  இதுதொடர்பாக ஹைதராபாதில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபித் ரசூல் கான், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
  மத்தியில் அரசமைக்க கூட்டாட்சி அணிக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும்பட்சத்தில், காங்கிரஸின் ஆதரவை கோரும் உபாயம் குறித்து ஆராயப்படும். அப்படி காங்கிரஸ் ஆதரவளித்தாலும், அந்த அரசு, கூட்டாட்சி முன்னணியின் அரசாகத்தான் இருக்கும். அந்த அரசுக்கு வெளியே இருந்துதான் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். 
  மத்திய அரசை வழிநடத்தும் பொறுப்பு, பிராந்திய கட்சிகளிடமே இருக்க வேண்டும் என்பதில் டிஆர்எஸ் கட்சி உறுதியாக உள்ளது. அந்த பொறுப்பை காங்கிரஸிடம் கூட்டாட்சி முன்னணி அளிக்காது.
  கூட்டாட்சி முன்னணிக்கே பிரதமர் பதவி: அதேபோல், பிரதமர் பதவியும் கூட்டாட்சி முன்னணியில் இருக்கும் ஏதேனும் ஒரு கட்சிக்கே அளிக்கப்படும். கூட்டாட்சி முன்னணியில் இருக்கும் கட்சிகள் கருத்தொற்றுமை அடிப்படையில், பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும்.
  இருப்பினும், பாஜகவுடன் கூட்டாட்சி முன்னணி எத்தகைய உறவையும் வைத்து கொள்ளாது. பாஜகவுடன் கூட்டணி சேர்வதை நாங்கள் விரும்பவில்லை. பாஜகவுடன் எத்தகைய உறவை வைக்கவும் எங்கள் அணிக்கு விருப்பமில்லை. பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது அல்லது அக்கட்சியின் ஆதரவை பெறுவது ஆகியவற்றையும் நாங்கள் விரும்பவில்லை. சந்திரசேகர் ராவுடன் பேசிய பெரும்பாலான அரசியல் தலைவர்களும் இதே கருத்தையே வலியுறுத்தினர்.
  திமுகவுக்கு அழைப்பு: மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகளான சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக ஆகியன அதிக இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. காங்கிரஸ் கட்சி 180 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறவில்லையெனில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதனுடன் இருப்பது பயனில்லை. அதனால் கூட்டாட்சி அணிக்கு திமுக வர வாய்ப்புள்ளது.
  கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கைகளே ஓங்கியுள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் டிஆர்எஸ் கட்சி பேசி வருகிறது. கேரளத்திலும், பிற இடங்களிலும் இடதுசாரிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி பெறுவார்கள் என டிஆர்எஸ் எதிர்பார்க்கிறது என்றார் அபித் ரசூல்கான்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai