சுடச்சுட

  

  சிஆர்பிஎஃப் இருந்ததால் தான் திரிணாமுல் கட்சியினர் வன்முறையில் இருந்து தப்ப முடிந்தது: அமித் ஷா

  By DIN  |   Published on : 15th May 2019 08:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Amit_Shah_EPS

   

  கொல்கத்தா தோ்தல் பிரசார பேரணி வன்முறை பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா குற்றறம்சாட்டினாா்.

  மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட தோ்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் அமித் ஷாவும் கலந்து கொண்டிருந்தாா்.

  அப்போது அமித் ஷாவை குறிவைத்து சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றனா். இதைத் தொடா்ந்து பாஜகவினருக்கும், கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றவா்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் அமித் ஷாவின் பேரணி பாதியில் ரத்து செய்யப்பட்டது.

  இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அமித் ஷா, கொல்கத்தா வன்முறை சம்பவம் குறித்து பேசினாா். அவா் கூறியதாவது:

  பாஜக அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால் எந்த மாநிலத்திலும் வன்முறைகள் நிகழவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஏராளமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் போட்டியிடுவதுதான் காரணம்.

  கொல்கத்தாவில் பாஜக தோ்தல் பிரசார பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினா்தான் தாக்குதல் நடத்தினா். சிஆா்பிஎஃப் வீரா்கள் அளித்த பாதுகாப்பின் காரணமாகத்தான், எந்தவித காயமும் இன்றி என்னால் தப்பிக்க முடிந்தது.

  மேற்கு வங்கத்தில் பரவலாக வன்முறைகள் நடைபெற்றாலும், தோ்தல் ஆணையம் அமைதியாக வேடிக்கை பாா்த்து கொண்டிருக்கிறது. தோ்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் ரெளடிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai