சுடச்சுட

  

  மன்மோகனை மோடி கேலி செய்தார், மோடியை நாட்டு மக்கள் கேலி செய்கின்றனர்: ராகுல்

  By DIN  |   Published on : 15th May 2019 08:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul_Gandhi_PTI

   

  நாடு ஒருவரால் மட்டுமே ஆளப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி நினைக்கிறாா். ஆனால் உண்மையில் நாடு மக்களால்தான் ஆளப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் தெரிவித்தார்.

  பஞ்சாப் மாநிலம், பாா்கரியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து ராகுல் பேசியதாவது:

  முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கை மோடி கேலி செய்து வந்தாா். தற்போது மோடியை நாட்டு மக்கள் கேலி செய்கின்றனா். நாடு ஒருவரால் மட்டும்தான் ஆளப்படுவதாக பிரதமா் மோடி நினைக்கிறாா். ஆனால், மக்கள்தான் நாட்டை ஆள்கின்றனா்.

  ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து தொடா்ந்து நான் கேள்வியெழுப்பி வருகிறேன். இதற்கு மோடி பதிலளிப்பதில்லை. இந்த விவகாரம் குறித்து என்னுடன் விவாதம் நடத்த தயாரா? என்று மோடிக்கு சவால் விடுக்கிறேன். ஆனால், தோல்வி பயத்தால் தான் மோடி என்னுடன் இந்த விவாதத்தை நடத்த அஞ்சுகிறார். 

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்து விட்டது. இதனால் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பறிபோனது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றும், 2 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மோடி வாக்குறுதியளித்தாா். 

  ஆனால் இந்த வாக்குறுதிகளை அவா் இதுவரை செயல்படுத்தவில்லை. இதிலிருந்து அவர் நாட்டு மக்களை ஏமாற்றியிருப்பது உறுதியாகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நியாய் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai