சுடச்சுட

  
  ANI-1128658834090799105-20190515_192010-img2


  பஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) டிராக்டர் ஓட்டினார். 

  பஞ்சாப் மாநிலத்தில் லுதியானா காங்கிரஸ் வேட்பாளர் ரவ்நீத் சிங் மற்றும் ஃபரீத்கோட் காங்கிரஸ் வேட்பாளர் முகமது சாதிக் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் பங்கேற்று பேசினார். 

  இதனிடையே, ராகுல் காந்தி லுதியானாவில் டிராக்டரை ஓட்டினார். அப்போது, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், லுதியானா எம்பி ரவ்நீத் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆஷா குமார் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் இருந்தனர். 

  ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai