எனக்கு எந்த வருத்தமும் கிடையாது: சிறையில் இருந்து வெளியான பாஜக பெண் நிர்வாகி பேட்டி

மம்தா பானர்ஜியின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பெண் நிர்வாகி உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று சிறையில் இருந்து வெளியானார்.
எனக்கு எந்த வருத்தமும் கிடையாது: சிறையில் இருந்து வெளியான பாஜக பெண் நிர்வாகி பேட்டி


மம்தா பானர்ஜியின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பெண் நிர்வாகி உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று சிறையில் இருந்து வெளியானார்.

மம்தாவின் முகத்தை போட்டோஷாப் மென்பொருள் உதவியுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்துடன் இணைத்து முகநூலில் வெளியிட்டதாக பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் நிர்வாகி பிரியங்கா ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மே 10-ஆம் தேதி மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்
பட்டார். 
பிரியங்கா ஷர்மா மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரியங்கா ஷர்மாவுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், பிரியங்கா ஷர்மா சிறையில் இருந்து வெளிவரும்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், இது நிபந்தனை ஜாமீன் இல்லை என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 

இந்த நிலையில், பிரியங்கா ஷர்மா இன்று (புதன்கிழமை) சிறையில் இருந்து வெளியானார். இதையடுத்து, பாஜக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நான் ஒன்றும் செய்யவில்லை. சிறையில் நான் துன்புறுத்தப்பட்டேன். சிறை அதிகாரி கூட என்னை நேற்று தள்ளிவிட்டார். இதுபோன்ற சிறை அறைக்கு தள்ளிவிடுவதற்கு நான் ஒன்றும் குற்றவாளி அல்ல என்று அவர்களிடம் தெரிவித்தேன். 

அவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். சிறையில் இருந்த சூழல் மோசமாக இருந்தது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com