பிரதமர் வேட்பாளர்: தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பிரதமர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படும் என்று ஆந்திர முதல்வரும்,
பிரதமர் வேட்பாளர்: தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமை


மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பிரதமர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படும் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், ஹால்டியாவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.  பிரதமர் மோடி, சாதனை எதையும் படைக்கவில்லை. அதனால்தான், புல்வாமா (பயங்கரவாத தாக்குதல்) குறித்தும், விமானப்படை தாக்குதல் (பாலாகோட்) குறித்தும் அவர் பேசுகிறார்.
மோடியின் பிரசாரத்தை பார்த்தீர்கள் எனில், அவர் பலவீனமாகவும், விரக்தியிலும் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்பும் அவர் பலவீனமானார். ஆனால் அதை சமாளித்து விட்டார். யாரும் எதிர்த்து பேச கூடாது என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை மோடி மிரட்டினார் என்றார் சந்திரபாபு நாயுடு.
அப்போது அவரிடம், மத்தியில் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலை நேரிட்டால், அதில் காங்கிரஸ் சேர்த்து கொள்ளப்படுமா? அல்லது காங்கிரஸ் சேர்த்து கொள்ளப்படாதா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு சந்திரபாபு நாயுடு பதிலளிக்கையில், மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.க்கள் தேவை. அப்படியிருக்கையில், கட்டுப்பாடுகள் எதுவும் விதித்தால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாதிக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அமர்ந்து பேசி, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பது குறித்து கருத்தொற்றுமையுடன் முடிவெடுக்கும் என்றார்.
ராகுல் நல்ல தலைவர்: மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திரபாபு நாயுடு புகழ்ந்தார். அவர் கூறியதாவது: ராகுல் காந்தி நல்ல தலைவராவார். வெறுமையான, யாருடைய பேச்சுக்கும் மதிப்பளிக்காத மோடியை போலல்லாமல், நாடு தொடர்பான கவலைகள் ராகுலுக்கு உள்ளன. பிறரை மிரட்டி, ஆட்சி செய்ய மோடி முயற்சித்தார். கடந்த 1996-1998ஆம் ஆண்டுகாலத்தில் காங்கிரஸ் இல்லாமல் மத்தியில் அரசமைக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்ததால் தனது ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றது. எனவே நிலையான அரசு வேண்டுமெனில், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை: எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கு உரிமை கோருமா? என கேட்கிறீர்கள். தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகின்றன என்பதை பொறுத்தே அது தெரியும். அதேநேரத்தில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில், ஆந்திரத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் 25 மக்களவைத் தொகுதிகள்தான் உள்ளன. எனவே தேசத்தை கட்டமைக்க நான் பங்களிப்பு அளிக்க போகிறேன். பிறருக்கு எனது ஆதரவை அளிப்பேன். கடந்த 1998ஆம் ஆண்டிலும் பிரதமராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com