சுடச்சுட

  

  இந்திய ஏவுகணைகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி: அதிகாரிகள் தகவல்

  By DIN  |   Published on : 16th May 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் தென்கிழக்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விரைவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  சிங்கப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரமோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. ஐயர் கூறியதாவது:
  தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல இந்தியாவிடமிருந்து ஏவுகணைகளைக் கொள்முதல் செய்யத் தயாராக உள்ளன. வளைகுடா நாடுகளும் இந்திய ஏவுகணைகளில் மிகுந்த நாட்டம் காட்டி வருகின்றன. அந்த நாடுகளுக்கு ஏவுகணைகளை விரைவில் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதி தேவைப்படுகிறது என்றார் அவர்.
  தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால், அவை விலைகுறைந்த, அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிக்க தளவாடங்களை வாங்க முயன்று வருகின்றன. இதனால், இந்தியப் பாதுகாப்புத் துறை பெரிதும் பயனடைய உள்ளது.
  இந்தக் கண்காட்சியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பு, எல்&டி நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை தங்களது தளவாடங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து 230க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
  பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரி நிக் மெக்டொனால்ட் ராபின்சன் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் பிரிட்டன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. தளவாடங்கள் உற்பத்தியில் அதிக அனுபவம் கொண்டுள்ள இந்திய நிறுவனங்களுடன் பிரிட்டன் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai