சுடச்சுட

  


  ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், கடந்த 2015-ஆம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருந்ததாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  இதுகுறித்து, அந்த நாட்டைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் பொது சுகாதாரக் கல்லூரி, 2000 முதல் 2015 வரையிலான புள்ளிவிவரங்களைக் கொண்டு செய்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:
  5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில், இந்தியா கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
  2000-ஆம் ஆண்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டுக்கு 25 லட்சமாக இருந்த நிலையில், அது 2015-ஆம் ஆண்டில் 12 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இது உலகிலேயே மிகவும் அதிகமாகும்.
  மேலும், குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்திய மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
  கோவாவை விட அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தைகளின் இறப்பு 7 மடங்கு அதிகமாக உள்ளது.
   5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு பெரும்பாலும் பிறவி குறைபாடு காரணமாக இருந்தாலும், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்களில் தவிர்க்கக் கூடிய தொற்று நோய்களே பிரதான காரணங்களாக விளங்குகின்றன.
  நோய் தடுப்பு மருந்துகள், மகப்பேறு மருத்துவம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகித்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai