சுடச்சுட

  

  பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வராது: குலாம் நபி ஆஸாத்

  By DIN  |   Published on : 16th May 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gulamnabiaasath1


  மத்தியில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.
  பிகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இதுகுறித்து அவர் கூறியதாவது:
  மக்களவைக்கு கடைசி கட்டத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்தியில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நரேந்திர மோடியாலும் 2ஆவது முறையாக மீண்டும் பிரதமராக முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத, பாஜக அல்லாத அரசுதான் மத்தியில் அமைய போகிறது.
  தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு, காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரின் பெயர், பிரதமர் பதவிக்கு கருத்தொற்றுமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால் நல்லது. எனினும், இதை காங்கிரஸ் கட்சி பிரச்னையாக்காது. காங்கிரஸுக்கு பிரதமர் பதவி அளிக்காவிட்டால், பிற கட்சியினருக்கு அப்பதவி கிடைப்பதை காங்கிரஸ் தடுத்து நிறுத்தாது.
  மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது; மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோள் ஆகும். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பலம் 125 எம்.பி.க்களை தாண்டாது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெறுப்புணர்வு, பிரித்தாளுதல் ஆகியவற்றை உருவாக்கி பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அதேபோல், முதலாளித்துவ மற்றும் தொழிலதிபர்கள் ஆதரவு கொள்கைகளை பாஜக கடைபிடிக்கிறது என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
  மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால், நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் துயரத்தில் உள்ளனர். 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று இளைஞர்களுக்கு நரேந்திர மோடி அரசு வாக்குறுதியளித்தது. ஆனால் இதற்கு மாறாக, நரேந்திர மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் 4.73 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டன.
  அறிவியல் தொடர்பான பிரதமரின் பேச்சை கேட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன் என்று குலாம் நபி ஆஸாத் கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai