சுடச்சுட

  

  பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 16th May 2019 07:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ghulam_Nabi_Azad_PTI


  பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

  "நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். கருத்து ஒற்றுமை ஏற்பட்டு அந்த முடிவு காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்தால், அதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை ஏற்கும். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களது ஒரே குறிக்கோள். 

  பிரதமர் பதவி எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், வேறு யாரும் பிரதமர் ஆகக் கூடாது என்று நாங்கள் பிரச்னை ஏதும் ஏற்படுத்தமாட்டோம்" என்றார்.  

  எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடக்கம் முதலே எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai