மே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பானது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மதச்சார்பற்ற கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் மற்றும் ஆகியோர் அடங்கிய பிரத்யேக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. இதனிடையே, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். அதனால், மூன்றாவது அணி உருவாவது தொடர்பான விஷயங்கள் குறித்தும் காங்கிரஸ் கவனமாக உள்ளது.  

மே 23-ஆம் தேதி நடைபெறும் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சந்திரசேகர ராவ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை. 

முன்னதாக, மே 21-ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கூட்டம் நடத்துவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com