சுடச்சுட

  
  mamta1

   

  பாஜக பணம் ஒன்றும் தனக்கு தேவையில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுதொடர்பாக வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியதாவது:

  மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட தோ்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் அமித் ஷாவும் கலந்து கொண்டிருந்தாா். அப்போது அமித் ஷாவை குறிவைத்து சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றனா். 

  இதைத் தொடா்ந்து பாஜகவினருக்கும், கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றவா்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் அமித் ஷாவின் பேரணி பாதியில் ரத்து செய்யப்பட்டது. சிஆா்பிஎஃப் வீரா்கள் அளித்த பாதுகாப்பின் காரணமாகத்தான், எந்தவித காயமும் இன்றி என்னால் தப்பிக்க முடிந்தது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டார்.

  இந்நிலையில், வித்யாசாகர் சிலை விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது,

  வன்முறையின் போது கொல்கத்தா கல்லூரியில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையை மறுசீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், எங்களுக்கு பாஜக-வின் பணம் தேவையில்லை. அதனை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள எங்களிடம் போதிய நிதி வசதி உள்ளது.

  இதன்மூலம் மேற்கு வங்கத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை பாஜக சீர்குலைத்துவிட்டது. பாஜக-வை ஆதரிப்பவர்களை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது. தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது பாஜக-வுக்கு வாடிக்கை. சமீபத்தில் கூட திரிபுராவில் இதேபோன்று செய்துள்ளனர். 

  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்களிலும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai