இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை

சீனாவுடனான வர்த்தகப் போரால், இந்தியா போன்ற வர்த்தக முன்னுரிமை (ஜிஎஸ்பி) நாடுகள் பலனடையும் என்றும், இந்தியாவுக்கான ஜிஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அது சீனாவுக்கு சாதகமாக இருக்கும் என்றும்
இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை


சீனாவுடனான வர்த்தகப் போரால், இந்தியா போன்ற வர்த்தக முன்னுரிமை (ஜிஎஸ்பி) நாடுகள் பலனடையும் என்றும், இந்தியாவுக்கான ஜிஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அது சீனாவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
ஜிஎஸ்பி முறையில், முன்னுரிமை பெற்ற நாடுகளுக்கு பல்வேறு சலுகை விகிதங்களில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அந்த முறைப்படி, இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா, துருக்கி போன்ற நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், இந்தியாவுக்கான இந்த ஜிஎஸ்பி சிறப்பு அந்தஸ்தை 60 நாள்களுக்குள் ரத்து செய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  கடந்த மாதம் 4-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான ஜிஎஸ்பிக்கான கூட்டணி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரில், ஜிஎஸ்பி நாடுகளான இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, துருக்கி போன்ற நாடுகள் பலன் பெறும்.
சீனா மீதான கூடுதல் வரி விதிப்பையடுத்து, ஜிஎஸ்பி நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 10.5 கோடி டாலர் (சுமார் ரூ.737.5 கோடி) மிச்சமாகியுள்ளது.
இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தோடு (2.8 கோடி டாலர்) ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகமாகும்.
2019-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ள ஜிஎஸ்பி நாடுகளின் இறக்குமதிப் பொருள்களில்  90 சதவீதம், கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சீனப் பொருள்களின் வகையைச் சேர்ந்தவை ஆகும்.
எனவே, சீனாவுடனான வர்த்தகப் போரால் இந்தியா போன்ற ஜிஎஸ்பி நாடுகள் பலனடையும். ஆனால், இந்தியாவுக்கான ஜிஎஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் சீனப் பொருள்களையே நாடத் தொடங்கும். அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com