தேர்தல் ஆணையத்திடம் பாஜக மீது திரிணமூல் காங்கிரஸ் புகார்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின்
தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்து விட்டு வெளியேறும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் டெரிக் ஓபிரையன் மற்றும் கட்சியின் பிற நிர்வாகிகள்.
தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்து விட்டு வெளியேறும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் டெரிக் ஓபிரையன் மற்றும் கட்சியின் பிற நிர்வாகிகள்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை  பாஜகவினர் சேதப்படுத்தியது தொடர்பான ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓபிரையன் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை சென்றனர். அப்போது தேர்தல் ஆணையத்திடம் வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை  திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அளித்தனர்.
முன்னதாக, தில்லியில் செய்தியாளர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பேட்டியளிக்கையில், வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விடியோ பதிவை வெளியிட்டனர். மேலும், திரிணமூல் காங்கிரஸார் மற்றும் போலீஸாருடன் மோதலில் ஈடுபடும் வகையில், இரும்பு கம்பிகள், ஆயுதங்களுடன் பாஜகவினர் வர வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர் ஒருவர் அழைப்பு விடுக்கும் வகையிலான விடியோ பதிவையும் வெளியிட்டனர்.
இதுகுறித்து டெரிக் ஓபிரையன் கூறுகையில், பாஜகவினர் செய்த காரியத்தை மட்டுமல்லாமல், அமித் ஷா ஒரு பொய்யர், ஏமாற்று பேர்வழி என்பதையும் இந்த விடியோ வெளிப்படுத்துகிறது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால், மேற்கு வங்காளத்தின் பெருமை பாதிக்கப்பட்டு விட்டது. கொல்கத்தா நகர வீதிகளே அதிர்ச்சி மற்றும் ஆத்திரத்தால் நிரம்பியிருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com