மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் கிடையாது:  அஜித் பவார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தமக்கு எந்த சந்தேகமும் கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் கிடையாது:  அஜித் பவார்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தமக்கு எந்த சந்தேகமும் கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து புணேயில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஏராளமானோர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதில் தில்லு முல்லு செய்ய முடியும் என நினைக்கின்றனர். ஆனால் எனக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு மீது எந்த சந்தேகமும் கிடையாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியும் எனில், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சி (பாஜக) தோல்வியை சந்தித்திருக்காது என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆதரவாக அஜித் பவார் கருத்து தெரிவித்திருப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 
ஹைதராபாத், குஜராத் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும், அந்த வாக்கு பாஜக சின்னத்தில் பதிவானதாக சரத் பவார் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com