சுடச்சுட

  

  அனுமதியின்றி வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததாகப் புகார்: ஹரியாணா அமைச்சருக்கு எதிராக வழக்கு

  By DIN  |   Published on : 17th May 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி வாக்குச் சாவடி மையத்துக்குள் நுழைந்ததாக அந்த மாநில அமைச்சர் மணீஷ் குரோவர், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பி.பி.பத்ரா ஆகியோருக்கு எதிராக அந்த மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
  குரோவர், ரோத்தக் மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வாக்குச்சாவடியில் அனுமதியின்றி நுழைந்தனர். கும்பலுடன் நுழைந்த அவர்கள் பிரச்னையை ஏற்படுத்தினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவ் குலாம் நபி ஆஸாத், தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் கடிதம் அளித்தார்.
  பத்ரா கூறுகையில், குரோவர், கும்பலுடன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்தார். அவர் சில ஆட்களை சேர்த்துக் கொண்டு வாக்குச் சாவடிக்குள் நுழையப்போகிறார் என்பதை அறிந்ததும் அதை தடுப்பதற்காக அங்கு சென்றேன். வாக்காளர்களை அச்சுறுத்தியதற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்களிடம் விடியோ ஆதாரம் இருக்கிறது. குற்றத்தை தடுப்பது குற்றம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது. குற்றத்தை தடுக்கவே வாக்குச் சாவடிக்கு நான் சென்றேன் என்றார்.
  தனக்கு எதிரான புகாரை குரோவர் மறுத்தார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் புகார் அடிப்படை ஆதாரமற்றதாகும். காங்கிரஸ் பிரமுகர்கள்தான் அனுமதியின்றி வாக்குச்சாவடிக்குள் நுழைந்தனர் என்றார்.
  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai