முதல் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளைத் தவிர்த்த மோடி: ஏன் தெரியுமா?

பிரதமர் மோடி, தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா தான் பதிலளிப்பார் என்று கேள்விகளை தவிர்த்தார்.

17-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட பிரசாரம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரசாரம் நிறைவடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை. 

இந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதை பிரதமர் மோடி தவிர்த்தார். 

அதற்கான காரணத்தை விளக்கிய பிரதமர் மோடி, "இந்த செய்தியாளர் சந்திப்பை கட்சியின் தலைவர் அமித் ஷா தான் நடத்துகிறார். பாஜகவில் ஒழுக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com