வாராணசியில் மோடி புத்தகங்களுக்கு தேவை அதிகரிப்பு

வாராணசியில் மோடி பெயரில் வெளியாகும் புத்தகங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாராணசியில் மோடி பெயரில் வெளியாகும் புத்தகங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு தேர்தல் பரபரப்பு அதிகமாகவே காணப்படுகிறது. 
புனித நகரமாக கருதப்படும் அந்தத் தொகுதியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை எடுத்துக்காட்டும் வகையில் அவரின் தலைப்பிலான புத்தகங்களின் விற்பனை அமோகமாக இருப்பதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக,  தி ரியல் மோடி , நரேந்திர மோடி: ஒரு நேர்மறை சிந்தனை ஆகிய புத்தகங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இந்த புத்தகத்தின் அட்டைப்பட தோற்றம் அனைவரும் கவரும் விதத்தில் உள்ளதால், சூடான கேக், டீ விற்பனையைப் போன்று அதன் விற்பனையும் பரபரப்பாக உள்ளது என யுனிவர்சல் புத்தக நிறுவனத்தின் உரிமையாளர் அமித் சிங் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புத்தகங்கள் விற்பனையைப் போன்றே மோடி உருவம் பொறிக்கப்பட்ட சுவர் கடிகாரங்களின் விற்பனையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதாக வாராணசி பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 
பனாரஸ், காசி என புராதனப் பெயர்களில் அழைக்கப்படும் வாராணசியில் மே 19-இல்  தேர்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com